பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் - Payanthu Kartharin Paathai Yanil Panninthu
பல்லவி
பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
அனு பல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்
சரணங்கள்
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
கர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
Comments