ஐயனே உமது திருவடிகளுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் - Iyaney Umathu Thiruvadikaukikey

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
 ஆயிரந்தரந் தோத்திரம் !
 மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
 விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில்
தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே:
அந்தடைவாயிப் பகலிலுங் 
கிருபையாகவா  தரிப்பீரே.

3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
   கருணையாய்  என்னை
உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும்.

4. நாவிழி செவியை நாதனே, இந்த
   நாளெல்லாம்  நீர் காரும்.
 தீவினை விலகி நான் திருமுகம் நோக்க தெய்வமே, அருள் கூரும்.

5.கைகாலால் நான் பவம் புரியாமல்
  சுத்தனே துணை நில்லும்
  துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
  தூய் வழியே செல்லும்.

6. ஊழியந்தனை நான் 
உண்மையாய்ச் செய்ய
உதவி நீர் செய்வீரே.
ஏழைநான் உமக்கே 
இசையானால் ஆவி இன்பமாய்ப் பெய்வீரே.

7.  அத்தனே ! உமது மகிமையை நோக்க 
அயலான் நலம் பார்க்கச் சித்தமாய் அருளும், 
மெய் விசுவாசம் தேவனே உமக் கேற்க.
 
8. இன்றும்  என்மீட்பைப் பயம் நடுக்கத்தோடேயடியேன்  
நடத்தப் பொன்றிடா பலம் தாரும், என் நாளைப் பூவுலகில் கடத்த 
 
9. இந்த நாளிலுமே திருச்சபை வளர 
ஏகா தயைகூரும் தந்தையே, நானதற்  குதவியாயிருக்கத்தற்பரா வரந் தாரும் 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு