இயேசுவின் நாமம் ஜெய நாமம் / yesuvin namam jeya namam

இயேசுவின் நாமம் ஜெய நாமம் 
நேசிக்க சிறந்ததோர் இன்ப நாமம் 
சர்வத்தையும் ஜெயித்த உயர்ந்த நாமம் 
சதாகாலம்  ஜெயத்தோட காக்கும் நாமம் 
ஜெயம் ஜெயம் அல்லேலூயா 
ஜெயம் ஜெயம் நமக்கே (2) - இயேசுவின் நாமம்

பாரங்கள் பாவங்களை போகும் நாமம் 
பரிசுத்தமாக்கிடவும் கழுவும் நாமம் 
சகல நோய்களையும் சிலுவையில் சுமந்த 
சர்வாங்க சுகமதை தரும் நாமமே - இயேசுவின் நாமம்

சாபமே நீங்கி ஆசீர்வாதம் பெறவே 
சாத்தானின் கோட்டைகளை தகர்க்கும் நாமம் 
சத்ருவின் சகல வல்லமையை ஜெயிக்க 
சர்வாயுதவர்கம் தரித்திடுவோமே - இயேசுவின் நாமம்

மண்ணதில்  அதிசயம் காணச்செய்யும் 
விண் புவியில் அதிகாரம் உடைய நாமம் 
எல்லா முழங்கால்களும் முடங்கிட செய்திடும் 
வல்லவரின் நாமமே அதிசயமே  - இயேசுவின் நாமம்

ஊற்றுண்ட தைலமவர் திவ்ய நாமமே 
உத்தமரும் கன்னியரும் நேசிக்கும் நாமம் 
ஊற்றிடும் தம் ஆவியால் ஜெயக்கொடி ஏற்றியே 
உலகெங்கும் சாட்சியை மாற்றும்  நாமமே  - இயேசுவின் நாமம்

கர்த்தரின் நாமமே பலத்த துரோகம் 
சுத்தர் ஓடி அதற்குள் சுகமாயிருப்பார் 
ஜெபத்துடன் விழித்து ஏசுவையே கண்டிட 
ஜெயம் கொண்ட ஆத்துமா ஆகிடுவோமே  - இயேசுவின் நாமம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு