கர்த்தரின் நாமமே பலமான துருகமே - Kartharin namamey Palamana Thurukamey
1. என்றென்றும் வந்தடையும் கன்மலையம் இயேசுவே
எந்தனின் தாகம் தீர்க்கும் கன்மலையம் இயேசவே
ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நாடியே
உலகெல்லாம் அலைந்தலைந்து தேடியும் நான் காண்கிலேன்
பல்லவி
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாகத் தங்குவேன்
கர்த்தரின் செட்டையின்கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
2. கர்த்தரின் காருண்யம் அதெத்தனை பெரியதே
கர்த்தரின் செளந்தரியம் அதெத்தனை பெரியதே
என் கண்கள் இராஜாவை மகிமையோடு காணுமே
தூரத்தில் உள்ள தேசமாம் சீயோனைக் காணுமே -- கர்த்தரின்
3. உம்மிலே பெலனைடையும் மாந்தர் பாக்கியவான்௧ளே
உந்தனின் வீட்டில் வாசம் செய்வோர் பாக்கியவான்௧ளே
அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாக்கிக் கொள்ளுவார்
பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோன் வந்து சேருவார் -- கர்த்தரின்
4. பகலின் வெயிலிலே எனக்கு நிழலானீரே எர்த்தரின்
இரவின் இருளிலே என் வெளிச்சமாய் உதித்தீரே
தாழ்விலும் துயரத்திலும் என்னையும் நினைத்தீரே
உயர்விலும் உம்மைவிட்டு பிரிந்திடாமல் காத்தீரே -- கர்த்தரின்
5. உந்தன் மறைவிடம் என் இளைப்பாறும் ஸ்தலம் அன்றோ
உந்தன் மறைவிடம் நான் உருவாகும் ஸ்தலம் அன்றோ
மணவாளனே நான் உந்தன் சாயலாக மாறுவேன்
மறுரூபமாகியே உம்மோடு வந்து சேருவேன் -- கர்த்தரின்
Comments