அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோம் - Anbin Devan Azlaikintar ontu kooduvom
அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோம்
ஆனந்தமாய் இயேசு பாதம் நாடிச் செல்லுவோம்
உறவின் வழியில் இறைவன் ஆட்சி மலரச் செய்யவே
மகிழ்வின் பலியில் அருளை வேண்டுவோம்
1. மதங்களில் புதைந்தோம் மனிதத்தை மறந்தோம்
வேற்றுமை வளர்த்தோம் இறைமையைத் தொலைத்தோம்
உள்ளங்கள் தெளிந்து உனதில்லம் வருகின்றோம்
உனதன்பு பலியிலே எமை ஏற்றிடுவாயே
புதுவாழ்வு மலரவே எமை மாற்றிடுவாயே
இறைவாழ்வு தரும் பலியினில் இணைவோம்
2. பகைமையை வளர்த்தோம் பாசத்தைத் தொலைத்தோம்
பாரினில் மாந்தர் உறவினை சிதைத்தோம்
புதுயுகம் படைக்கவே பலியினில் இணைகின்றோம்
உன் புனித பலியிலே எமை இணைத்திடுவாயே
அருள்வாழ்வில் மகிழவே எமை மாற்றிடுவாயே
சிலுவை பலியில் சிறந்திட விரைவோம்
Comments