எதிர்நோக்கு மன்றாட்டு
என் இறைவா, நீர் தந்துள்ள வாக்குறுதிகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமது அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். ஆமென்.