தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம், thaen inimaiyilum Yesuvin naamam

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே – அதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே

காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்’
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics