உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு, ummaiyallaamal enakku yaarunndu ummaiththavira viruppam ethuvunndu
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே… இயேசுநாதா…
தேவையெல்லாம் நீர்தானய்யா
1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
Comments