ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியை, Ootridume Um Vallavamiayaioottidumae um vallamaiyaiintha naalil engal maelae

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு