அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி ஆனந்த இல்லம் செல்வோம் - Arpaana Pookalai Anbuden Yenthi Aanantha

அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி
ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு
ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி
அவருக்கு நன்றி சொல்வோம்

1. உம் பெரும் கருணை நலன்களை சுவைத்தோம்
உம் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம்
தடைகளைக் கடக்க உமதருள் அடைந்தோம்
நிலையான அன்பிது நிதமுமைத் தொடர்வோம்
நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்

2. உம் அருள்மொழியின் பலன்களை சுவைத்தோம்
உம் திருக்கரத்தின் வலிமையை உணர்ந்தோம்
அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம்
அளவில்லா அன்பிது உன்னடி பணிந்தோம்
நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு