அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன், Anjalodu Nenjurugi Aavaalai vanthean

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!


1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் - இத்தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே - அஞ்சலோடு


2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே - நின்சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே - அஞ்சலோடு


3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் - நல்இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் - அஞ்சலோடு


4. பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே - வரும்பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா - அஞ்சலோடு


5. ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் - இம்மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே - அஞ்சலோடு

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு