பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே,paatith thuthi manamae paranaikkonndaatith thuthi thinamae
பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Comments