யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார், Yutha Raja Singam Uyirththelunthaar Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் – யூத

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு