முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை புதிய ஆலய கட்டுமான பணி விரைவில் நிறைவுற மன்றாட்டு

எங்கள் அன்புத் தந்தையே இறைவா! / உம்மை போற்றுகின்றோம் / உம்மை புகழ்கின்றோம் / கடந்த பல நூற்றாண்டுகளாக / முஞ்சிறை புனித ஆரோக்கிய அன்னை / தலத் திருச்சபையின் / மக்களாகிய எங்களை / அருள் வளங்களால் நிறைவு செய்து / வழிநடத்தியதற்காக / உமக்கு நன்றி கூறுகிறோம். / நீர் தங்கி வாழும் / இந்த ஆலயத்தின் / நூற்றாண்டு பெருவிழாவை / சிறப்பாக நடத்தித் தந்தீர் / அதற்காக உளமார நன்றி கூறுகிறோம்.

என் இல்லத்தை / மீண்டும் கட்டி எழுப்புங்கள் / அது எனக்கு / உகந்ததாய் இருக்கும் / அங்கே நான் / மாட்சியுடன் விளங்குவேன் / என்று ஆகாய் இறைவாக்கினர் வழி / அறிவுறுத்தும் ஆண்டவரே / சிறந்ததோர் ஆலயம் / கட்டி எழுப்பப்பட்ட / ஆவலுடன் உம்முன் பணிக்கிறோம். / எம் நீண்ட / நாள் தேவையே / நிறைவேற்றித் தந்தருள வேண்டுகிறோம். / இதன் வழி / உமது உயிருள்ள ஆலயமாக திகழும் எங்களை / அன்பினால் கட்டி எழுப்பியருளும்.

எங்கள் தலத்திருச்சபை / அருட்பணி பேரவை / அன்பியங்கள் / குடும்பங்கள்/ ஆலய கட்டுமான பணியில் இணைந்து / ஒற்றுமையுடன் சங்கங்கள், இயக்கங்கள் / இப்பணியில்/ இணைந்து செயல்படவும் / இறைவேண்டல் புரியவும் / வரம் தாரும் / இப்பகுதியில் வாழும் / அனைத்து மக்களும் / உதவிகரமும் / ஒத்துழைப்பும் / நல்க செய்தருளும் / எங்களின் இணைந்த செயல்பாடு / இப்பகுதியில்/ சமய / சமுதாய நல்லிணக்கத்துக்கு / சான்று பகர வேண்டுகிறோம்.

கட்டுமான பணியை மேற்கொள்ளும் / பணியாளர்களும்/ பணியாளர்களும் / கலைஞர்களும் / ஞானத்தோடும் / விவேகத்தோடும் / தொழில்நுட்ப திறமையுடனும் / செயல்படச் செய்தருளும்.

புது ஆலயம் கட்டி முடிக்க / நாங்கள் எல்லோரும் / தாராள மனத்துடன் / பொருள் உதவியையும் / உடல் உழைப்பையும் / அற்பணிக்க அருள்தாரும். / இப்பணியில் ஈடுபடும் / எங்கள் எல்லோரையும் / அருளினாலும் / வளங்களினாலும் நிரப்பும். / இவ்வேண்டுதலை / எங்கள் பாதுகாவலி / புனித ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையுடன் / உம் திருமகனும் / எங்கள் ஆண்டவருமான / இயேசு கிறிஸ்து வழியாக/ உம் பாதம் சமர்ப்பிக்கிறோம்.             ‌‌                          ‌‌ ‌‌                                      -ஆமென் 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு