என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது- Yen Koodave Irum Oh Yesuvey

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது என்
பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது (2)

1. இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனிரே (2)
என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே
நீங்கதானப்பா (2) - என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர்
தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே
நீங்க தானப்பா (2) - என் கூடவே

3. வியாதியின் நேரத்தில்
வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே 
நீங்க தானப்பா (2) - என் கூடவே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு