எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன், Enathu Manavalaneenathu manavaalanae en ithaya aekkamaeiniyavarae iyaesaiyaa

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2)


2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே


3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)


4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா


5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு