அன்பியம் என்றால் என்ன? What is Anbiyam?
கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற 15-20 மூன்று குடும்பங்கள் இணைந்து வாழும் ஓர் கிறிஸ்தவ அமைப்பு.
கிறிஸ்துவில் நம்பிக்கையோடு, அடிக்கடி கூடி வந்து, இறைவார்த்தையை மையப்படுத்தி, இறைவேண்டல் செய்து, பகிர்ந்து வாழும் ஓர் அமைப்பு. இன்ப துன்ப நிகழ்வுகளிலும் இணைந்து….
வழிபாடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் இணைந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது…
அன்பியம் இறைவார்த்தையையும் நட்புறவையும் அடித்தளமாகக் கொண்டு கத்தோலிக்கர் அனைவரும் குடும்பங்களாக இணைந்து சில குழுக்களாகச் சேர்ந்து கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் பங்கேற்பு திருச்சபையைக் கட்டி எழுப்புதல்.
அன்பியம் என்றால் என்ன ? திருத்தூதர் பணிகள் 2:42-47
நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை:
அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்…….
திருபணி 2:44-45:
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களையும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைக்கேற்பப் பகிர்ந்தளித்தனர்
திருபணி 2:46-47:
ஓவ்வொருவரும் நாளும் அவர்கள் தவறாது கூடி வந்தார்கள். பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள். எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள். ஆண்டவரும் தாம் மீட்டுக்கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.
திருபணி 4: 32-37:
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
இரண்டாம்வத்திக்கான்சங்கம்: நற்செய்தி அறிவிப்பு எண். 58. திருச்சபை ஓர் உறவு ஒன்றிப்பாக இருப்பதனால், புதிய அடிப்படைச் சமூகங்கள் (அன்பியங்கள்) உண்மையிலேயே திருச்சபையோடு ஒன்றிணைந்து செயல்படும்போது, உண்மையான உறவு ஒன்றிப்பின் வெளிப்பாடாகவும் இன்னும் ஆழந்த உறவு ஒன்றிப்பைக் கட்டியெழுப்பும் கருவியாகவும் அமையும்.
இவ்வாறு அன்பியங்கள் திருச்சபையின் வாழ்வுக்கான பெரும் நம்பிக்கையின் காரணமாய் விளங்குகின்றன.
ஆசியத் திருச்சபை எண் 25. அடிப்படை கிறிஸ்த சமூகங்கள் எல்லாப் பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் ஒன்றிப்பையும் பங்கேற்பையும் ஏற்கும் வழிமுறைகளாகவும் நற்செய்தி அறிவிப்பின் சிறந்த சக்தியாகவும் திகழக் கூடுமென்று ஆயர் மன்ற தந்தையர்கள் சுட்டிக்காட்டினர். தொடக்கக் கிறிஸ்தவர்கள் போன்று விசுவாசிகள் விசுவசிக்கவும் ஜெபிக்கவும் அன்பு சமூகங்களாக வாழவும் இச்சிறு குழுக்கள் உதவி செய்யும். அதுவே “அன்புக் கலாச்சாரத்தின்” வெளிப்பாடாகவும் அமையும்.
அருகாமையில் உள்ள கிறிஸ்தவர்கள் அக்கம் பக்கம் வாழும் கிறிஸ்தவர்களின் ஒன்றிணைப்பு
இறைவார்தை மையம், ஜெபம், பகிர்வு - இறைவார்த்தை ஒளியில் இறைசித்தத்தை அறியும் இடம்
தலத்திருச்சபையோடு உறவு – ஒரே பரிசுத்த அப்போஸ்தலிக்கத் திருச்சபை
செயல்பாடு உள்ளதாக இருக்க வேண்டும் - சீடர்களை உருவாக்க வேண்டும் (பக்தர்களை அல்ல)
Comments