உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம், Ummai Nampi Unthan PaathamUruthiyaay Pattik Kontoom
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒரு போதும் கைவிடமாட்டீர்
1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
Comments