சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்து இவர் தாம், Samaathaanam Oothum Yesukiristhu ivar thaam
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
Comments